சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பாருக் கொலை வழக்கு

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாருக் என்பவரை மார்ச் 16-ம் தேதி மத அடிப்படைவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். தற்போது, அந்தக் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாருக் என்பவர் கோயம்புத்தூரில் பழைய இரும்புக்கடை வியாபாரத் தொழில் செய்து வந்தார். அவர் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்தார். அவருடைய இந்தச் செயல் அவர் சார்ந்த மதத்திலேயே எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், மார்ச் 16-ம் தேதி கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வைத்து பாருக்கை ஒரு கும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அப்துல்முனாப், அக்ரம்ஜிந்தால், ஜாபர்அலி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சதாம் உசேன், சம்சுதின், அன்சாத் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த ஆறு பேரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.எஸ்.பி வேலன் இதற்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!