எழுத்தாளர் மா.அரங்கநாதன் காலமானார்

நாஞ்சில் நாட்டுக்காரரான மா.அரங்கநாதன், தமிழ்ப் புனைவு இலக்கியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர். தனது தனித்துவமான மொழிக்காகவும் தத்துவார்த்த அணுகுமுறைக்காகவும் கலைத்தன்மை மிக்க படைப்புகளுக்காகவும் கொண்டாடப்படுகிறவர்.

'முன்றில்' எனும் இதழை நடத்தியவர். இவரது படைப்புகள் பல, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, புதுச்சேரியில் வசித்துவந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலமற்றிருந்தவர், இன்று மாலை காலமானார். நாளை, புதுச்சேரியில் அவரது உடல் அடக்கம்செய்யப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!