வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (17/04/2017)

கடைசி தொடர்பு:17:22 (17/04/2017)

பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சருக்கு மூன்று ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

aranganayagam

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் அரங்கநாயகம். அக்காலக்கட்டத்தில் 1.15 கோடி ரூபாய்க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அரங்கநாயகத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம். மேலும், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ளார்.