சென்னையில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..! | ADMK ministers sudden meet at thangamani's home

வெளியிடப்பட்ட நேரம்: 22:32 (17/04/2017)

கடைசி தொடர்பு:08:01 (18/04/2017)

சென்னையில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..!

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

படம்: மீ.நிவேதன்

அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சுழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்க்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் வீட்டிலும் ஆலோசனை நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் 20 அமைச்சர்களும், எம்.பிக்களும் பங்கேற்று ஆலோசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாள்களாகவே அ.தி.மு.க.வின் இரு அணி அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிடோரும் இரு அணிகள் இணைவது குறித்து ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சில நாள்களுக்கு முன்னர் வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு வந்தார். 

அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அப்பொழுது, 'இரு அணிகளை இணைக்கும் ஓ.பி.எஸ். கருத்தை வரவேற்கிறேன். டி.டி.வி. தினகரன்  ராஜினாமா குறித்து விவாதிக்கப்படவில்லை' என்று கூறினார்

 


[X] Close

[X] Close