வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (18/04/2017)

கடைசி தொடர்பு:09:31 (18/04/2017)

’இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மகிழ்ச்சி' : ஓ.பன்னீர்செல்வம்

”அ.தி.மு.க இணைவது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. சசிகலா தரப்பில் ஒரு குழு அமைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படுவது பற்றி முடிவெடுப்போம்”, என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று  தேனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். பெரியகுளத்துக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற ஓ.பி.எஸ், பெரியகுளம் தென்கரையில் உள்ள சிருங்கேரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். 

படம்: வீ.சக்தி அருணகிரி

 இன்று காலை மீண்டும் சிருங்கேரி சங்கராச்சாரியாரை சந்தித்துப் பேசினார் பன்னீர்செல்வம். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக சசிகலா அணியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்தக் குழு எங்கள் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிப்போம்”, என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க