வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (18/04/2017)

கடைசி தொடர்பு:11:01 (18/04/2017)

டெல்லி போலீஸ் சென்னை வருகிறதா?.. வழக்கறிஞருடன் தினகரன் அவசர ஆலோசனை!

டி.டி.வி.தினகரன் தனது அடையாறு இல்லத்தில் வழக்கறிஞர் ஜீனசேனனை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் இருக்கின்றனர்.

TTV Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்தர்  என்பவர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

இது குறித்து விசாரணை நடத்த ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் இன்று சென்னை வருவதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இன்று வரவில்லை என்றும் நாளை வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.  டெல்லி போலீஸ் இன்று அல்லது நாளை சென்னை வர உள்ள நிலையில், தினகரன் தனது இல்லத்தில் வழக்கறிஞர் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன், கடந்த ஒரு மணிநேரமாக தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க