வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (18/04/2017)

கடைசி தொடர்பு:14:24 (18/04/2017)

இனி ஞாயிறுகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை!

தமிழகம், புதுச்சேரியில் வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

petrol bunk

பெட்ரோல், டீசல்களில் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. நீண்ட நாள்களாக டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், ஞாயிறுதோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்துள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.