வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (18/04/2017)

கடைசி தொடர்பு:15:35 (18/04/2017)

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா புதிய மனுத் தாக்கல்!

sasikala

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதற்குப் பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரி சசிகலா, சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1996-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேரில் ஆஜராவதற்குப் பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.