வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (18/04/2017)

கடைசி தொடர்பு:15:50 (18/04/2017)

பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்ய, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து தள்ளிவைக்கப்படுவதால், உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு கேள்வியெழுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, கால அவகாசம் கேட்டுள்ளது தமிழகத் தேர்தல் ஆணையம்.

கால அவகாசம் கோருவதை, பிரமாணப்பத்திரமாகத் தாக்கல்செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் ஜூலைக்குள் தேர்தலை நடத்திவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. தி.மு.க-வும் ஜூலைக்குள் தேர்தல் நடந்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.