வெப்பத்தின் தாக்கம் குறையும்! வானிலை ஆய்வு மையம் தகவல் | Heat will be decreased after a couple of days, says IMD

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (18/04/2017)

கடைசி தொடர்பு:17:06 (18/04/2017)

வெப்பத்தின் தாக்கம் குறையும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்னும் இரண்டு நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

heat

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் அதன் கொடூரத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டது. பருவ மழை பொய்த்துப் போனதன் காரணமாக, வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கிறது தமிழகம். கடந்த சில நாள்களாகவே பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துவருகிறது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் சார்பில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என அறிவுறுத்தபட்டிருந்தது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானதால், ஈரப்பதம் குறைந்து அனல் காற்று வீசுவதாகக் கூறப்பட்டது. இந்த அனல் காற்று, நாளை வரை மட்டுமே நீடிக்கும் எனவும், வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தெலங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்குதல் காரணமாக ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.