Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

'பள்ளிகளுக்கு, வரும் 21-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Sengottaiyan

தமிழகத்தில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 100 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று 106 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்று 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். அனல் காற்று வீசுவதால், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளித் தேர்வுகளை, மாற்றியமைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு, மாற்றுத் தேதி அறிவிக்கப்படும். குறிப்பாக, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகளைத்  தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement