Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழர்களை தெறிக்க விடும் மந்திரிகளின் பேச்சுவார்த்தை!


   டி.டி.வி. தினகரனுடன் மந்திரிகள்                                  

.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அதை இணைக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. இணைப்பு முயற்சியை மேற்கொண்ட முன்னாள் இந்நாள் முதன் மந்திரிகள் மற்றும் மந்திரிகள் அதற்காக நேற்றும் இன்றும் மட்டுமே பிரஸ்மீட்டிலும், பொது இடங்களிலும் எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த வார்த்தைகள் ... 

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். (17.4.2017) : சசிகலா அணியில் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசத் தயாராக இருக்கிறோம்.

ந்திரி டி.ஜெயகுமார் (17.4.2017) : அட, நீங்க (செய்தியாளர்கள்) ஏங்க  கதையையே மாத்தறீங்க? நாங்க எங்கே பேச்சு வார்த்தைக்கு வரோம்னு சொன்னோம். அவங்க வரோம்னு சொன்னாங்க. வந்தா பேசுவோம்னு சொல்றோம். எங்களுக்கு இரட்டை இலை மீட்பு முக்கியம்.

ந்திரி சிவி.சண்முகம் (17.4.2017) : டி.டி.வி. தினகரனை தேடிக்கிட்டு யாரு, யாரு வரப்போறாங்க ? உங்க கிட்டே  சொன்னாங்களா? (செய்தியாளர் ஒருவர்) நீங்க சி.பி.ஐ.யா ? நீங்க சி.பி.ஐ.யா ?,நீங்க  சி.பி.ஐ.யா ? (செய்தியாளர் எஸ்கேப்)

டி.டி.வி. தினகரன் : சசிகலா என்னோட சித்தி. நான் அவங்களைப் பாக்க பெங்களூரு சிறைக்கு போய்க் கிட்டிருக்கேன். நீங்க சொல்லித்தான் அந்த சுகேஷ் சந்தர்ஷேகர் பத்தியே தெரியுது. என்னது இரட்டை இலையை மீட்க நான் பணம் கொடுத்தேனா ?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (18.4.2017): சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அன்று  எம்.எல்.ஏ.க்கள் யாரும் மிரட்டப் படவில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரிலேயே வாக்களித்தனர்.

 ​​​​​​முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். (18.4.2017):  சசிகலா குடும்பம் ஆட்சிப் பொறுப்பிலும், கட்சிப் பொறுப்பிலும் இருக்கவே கூடாது. ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்பதில் உறுதியாக இருக்கிறோம். 


         ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம்                                      

ந்திரி ஓ.எஸ்.மணியன்  (18.4.2017): பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக இருக்கிறாரா என்பதை ஓ.பி.எஸ்.தான் கூறவேண்டும். மாற்றி மாற்றிப் பேசுவது பன்னீர் செல்வத்துக்கு அழகல்ல. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவது அசிங்கமான முயற்சி. சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஏற்கமுடியாத ஒன்று. 

வைகைச்செல்வன் (18.4.2017) : ஓ.பி.எஸ். என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது... கே பி முனுசாமி : பதவிக்காக விலை போகமுடியாது.அதையெல்லாம் துச்சமாக நினைத்தே எங்களின் தர்ம யுத்தம் தொடங்கியது! மைத்ரேயன் எம்.பி. :சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைவோம்.எம்.பி. சசிகலா புஷ்பா  (18.4.2017):  தலைமை இல்லாமல் அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கின்றனர். லஞ்சம் கொடுத்து இரட்டை இலையை வாங்க டி.டி.வி. தினகரன் முயற்சிப்பது ஏன்? தினகரனை உடனே கைது செய்ய வேண்டும்.

 மந்திரி செங்கோட்டையன்  (18.4.2017): அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் ஒன்றாக சேர வேண்டும், அணிகள் இணைவதை டி.டி.வி தினகரன் வரவேற்றுள்ளார். தினகரனுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதை நான் கூறுகிறேன்.  'அனைவரும்  ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார்.

துசூதனன் (18.4.2017):என்ன நடந்தாலும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர். அவரேதான் பொதுச் செயலாளர். சசிகலா வகையறாவுக்கு இனி கழகத்தில் இடமில்லை.

 மந்திரி வெல்லமண்டி நடராஜன்  (18.4.2017) :இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்களது குறிக்கோள். அதற்காகத்தான் இரு அணிகளும் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தவுள்ளது. 

எம்.எல்.ஏ. வெற்றிவேல் (18.4.2017) : " பதவிக்காக யார் யார்  எந்தெந்த கால்களில் விழுந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் யாரிடமும் மண்டியிட மாட்டோம். எது எப்படி நடந்தாலும் சசிகலாதான் கழகப் பொதுச்செயலாளர், டி.டி.வி.தினகரன் தான் துணைப் பொதுச்செயலாளர். 

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close