Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தினகரன் தலைமையில், அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்..!'- நாஞ்சில் சம்பத் திட்டவட்டம்

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அடையாறில் இருக்கும் அவரது வீட்டில் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் அங்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'அ.தி.மு.க-வின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார். டெல்லியில் இருக்கும் பா.ஜ.க-வின் அற்பத்தனமான மிரட்டுலுக்குப் பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கும் முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. அ.தி.மு.க உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்காரவைத்து அழகுபார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்.' என்று பேசினார்.

முன்னர், தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement