சென்னையில் 36 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..!

சென்னை மற்றும் இதர பகுதிகளில் சுமார் 78 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். பிரபல நிதி நிறுவனமான கோகுலம் சிட் ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் சோதனை நடக்கிறது.

it raid

சென்னையில், இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். சென்னை உள்பட சுமார் 78 இடங்களில் நடக்கும் இந்தச் சோதனையில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைசெய்துவருகின்றனர். முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனமான கோகுலம் சிட் ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கோவை, புதுச்சேரி, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில்... கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!