சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர் | Delhi Crime branch police officials reaches chennai for investigate TTV.Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (19/04/2017)

கடைசி தொடர்பு:09:10 (19/04/2017)

சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர்

டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சென்னை வந்தடைந்தனர். டி.டி.வி தினகரனிடம் இன்று அவர்கள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

ttv.dinakaran

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர்கள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, டி.டி.வி.தினகரனிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.