வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/04/2017)

கடைசி தொடர்பு:14:08 (19/04/2017)

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆஜர்! பிற்பகலில் விசாரணை தொடக்கம்

டி.டி.வி. தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ttv

1996-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

ttv


இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையைப் பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

படங்கள்: வி.ஸ்ரீநிவாசலு