கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி | wasn't upset for being destituted from the party

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (19/04/2017)

கடைசி தொடர்பு:14:23 (19/04/2017)

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

படம்: ஸ்ரீநிவாசலு

'அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்' என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாகக் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக நான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள், தற்போது நடத்திய கூட்டத்துக்கு என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட, நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். கட்சியில் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டதால், கட்சிக்கு நன்மை அளிக்கும் எந்த முடிவுக்கும் நான் ஒத்துழைப்பேன்.

சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்கப் பார்க்கிறார்கள். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அச்சத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என்னிடம் போனில் பேசினார்கள். அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது.

அமைச்சர்கள் அவர்களது முடிவை கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன். பின்னணியில் பாஜக இருக்கிறதா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. எனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் கட்சி, ஆட்சியை வழிநடத்த வேண்டும். கட்சி களங்கப்பட்டு விடக்கூடாது. கட்சி பொறுப்பை எனக்கு கொடுத்தது சசிகலாதான். சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்" என்று கூறினார்.

இதனிடையே, டி.டி.வி.தினரகன் ஆதரவு எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர்.
எம்எல்ஏ-க்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்களின் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close