நாமக்கல்லில் நிழல் இல்லாத நேரம் இன்று வருகிறது!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று, நிழல் தோன்றாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழக்கூடியது.

சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நமது நிழலை நாம் பார்க்க முடியாது. காரணம், நிழல் நம் காலுக்கு அடியில் இருக்கும். இதை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறுவதால், அந்த நாள் நிழலில்லா நாள் எனப்படுகிறது.

அதன்படி இன்று, நாமக்கல்லில் நிழல் இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 12 மணிக்குதான் சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் எனவும், பூமத்திய ரேகைகளின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் இந்த நிகழ்வு தோன்றும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எங்கெங்கு தோன்றும் என்பதை https://alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் அறியலாம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!