டி.டி.வி.தினகரன் விவகாரம்! விமானநிலையங்களை உஷார்படுத்தியது டெல்லி போலீஸ் | Airports on alert to stop dinakaran from escaping

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (19/04/2017)

கடைசி தொடர்பு:16:26 (19/04/2017)

டி.டி.வி.தினகரன் விவகாரம்! விமானநிலையங்களை உஷார்படுத்தியது டெல்லி போலீஸ்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ttv

அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்ததால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி பிரச்னைகளால் துவண்டுள்ள டி.டி.வி.தினகரன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக சந்தேகித்த டெல்லி காவல்துறையினர், அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் தப்பிச் செல்ல முயன்றால், உடனடியாக கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.