சென்னை வந்தது டெல்லி போலீஸ்; தினகரனிடம் விசாரணை!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவுசெய்தது.

Dinakaran

இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து அவர் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான எஃப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. பின்னர். அவர்கள் இன்று காலை வருவதாகக் கூறப்பட்டது. 

இதையடுத்து, அவர்கள் மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டனர். இந்த நிலையில், சற்று முன் டெல்லி போலீஸ் சென்னை வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அடையாறில் உள்ள தினகரனிடம் டெல்லி கூடுதல் ஆணையர் சஞ்சை ஷெரவத், காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் ஆகியோர் விசாரணை நடத்த உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!