Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் விசாரணையா?- தினகரன் சம்மன் குறித்து தகவல்!

இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் தினகரன்' என்று கூறி, டெல்லி காவல்துறையினர் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தினகரனுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவரிடம் 1.3 கோடி ரூபாய்களையும் பறிமுதல்செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், தினகரனுக்கு எதிராக அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்கள்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை முடிவுசெய்தது. விசாரணைக்கு தினகரனை அழைப்பதற்கான சம்மனை டெல்லி காவல்துறை அதிகாரிகள் தினகரனின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் சென்றுள்ளார்கள். அப்போது, இந்த வழக்கில் தினகரன் மீதான குற்றசாட்டுகள் குறித்தும் விளக்கியுள்ளார்கள். டெல்லி காவல்துறை கொடுத்துள்ள சம்மனில், வரும் சனிக்கிழமை அன்று டெல்லியிலுள்ள குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரன் ஆஜரான பிறகே, அவர் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement