Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீட் தேர்வுக்கு இல்லாத அவசியம் இதற்கு ஏன்..?'- மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற முனைப்புக் காட்டாத மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள் இந்தியில் உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதன் அவசியம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவுசெய்துள்ள ஸ்டாலின், 'இந்திய நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டுவருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. இந்த மண்ணின் சிறப்பம்சம் என்பதே பன்முகத்தன்மைதான். இந்த ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் வகையில், இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக, குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால், தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் கிராமப்புற-ஏழை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முனைப்புக் காட்டாத மத்திய அரசு, இந்தியில் உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் இத்தனை வேகம் காட்டவேண்டிய அவசியம் ஏன் வந்தது?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் இந்தித் திணிப்பை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி, இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு வித்திட வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close