வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (20/04/2017)

கடைசி தொடர்பு:13:59 (20/04/2017)

காரின் மேல் ஏறி, சிவப்புச் சுழல்விளக்கை அகற்றினார் முதல்வர் பழனிசாமி!

சுழல்விளக்கைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து,  தனது காரில் பயன்படுத்திய சிவப்புச் சுழல்விளக்கைத் தானே அகற்றினார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

edappadi palanisamy
 

தலைமைச்செயலகத்தில், முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். “பிரதமரின் கோரிக்கையை ஏற்று, சிவப்புச் சுழல்விளக்கு அகற்றப்பட்டுவிட்டது. தமிழக அமைச்சர்களும் தமது காரில் இருந்து சிவப்புச் சுழல்விளக்கை அகற்றுவார்கள்” என்றார்.

modi VIPடெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆபத்துக் காலத்தில் அவசர சேவைக்காகச் செல்லும் வாகனங்களைத் தவிர பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் இருந்து சிவப்புச் சுழல்விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். மோடியின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, தனது காரின் மேல் ஏறி சிவப்புச் சுழல்விளக்கை இன்று அகற்றினார்.  அப்போது, அமைச்சர்கள் உடனிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க