காகிதக் கோப்பையில் அப்துல் கலாம் உருவம் : கின்னஸ் சாதனை முயற்சி செய்து அசத்திய மாணவர்கள்!

கின்னஸ் சாதனை முயற்சியாக கோவை மணிகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் இணைந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவப் படத்தை இரண்டு லட்சத்து 35 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

abdul kalam
 

கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேம்போர்டு இன்டர்நேஷனல் எனப்படும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கின்னஸ் சாதனைப் படைக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை பள்ளி மைதானத்தில், சுமார் 167 மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து காகித கோப்பைகளைப் பயன்படுத்தி அப்துல்கலாம் அவர்களின் உருவப் படத்தை வடிவமைத்தனர். 10 ஆயிரத்து 560 சதுர அடியில் , கறுப்பு ,வெள்ளை, நீலம் உள்ளிட்ட 5 நிறங்களிலான சுமார் இரண்டு லட்சத்து  35 ஆயிரம் காகித கோப்பைகள் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளன.

 


காலை 6.30 மணியளவில் துவங்கிய பணி மாணவ, மாணவியர்களின் கூட்டு முயற்சியால் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிவடைந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் காகிதக் கோப்பைகளை பயன்படுத்தி லக்னோவில் நடைபெற்ற சாதனையை முறியடிக்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் வீடியோ பதிவுகளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஆதாரமாக அனுப்பப்பட உள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. கின்னஸ் சாதனை முயற்சியாக மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவப் படத்தை காகித கோப்பைகளை வைத்து தத்ரூபமாக அமைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் அசத்தினர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!