காவி உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நளினி கணவர் முருகன் | Rajiv murder case accused murugan appeared in Vellore court

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (20/04/2017)

கடைசி தொடர்பு:17:45 (04/02/2019)

காவி உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நளினி கணவர் முருகன்

ராஜீவ்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இன்று வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் முருகன் நேரில் ஆஜரானார். 

murugan

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் சிறையில் இருந்து வருகிறார். அவரிடம் இருந்து மார்ச் 25-ம் தேதி இரண்டு செல்போன்கள், 3 சிம் கார்டுகள், ஒரு சார்ஜரை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து முருகன் அவரது உறவினர்களை பார்ப்பதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி முகமது அனிபா உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று வேலூர் சத்துவாச்சாரி JM-1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். முருகன் காவி உடை அணிந்து துறவறம் மேற்கொண்ட நிலையில் காணப்பட்டார். தலையில் குடுமியுடன் காட்சி அளித்த முருகன் நீண்ட காலத்துக்கு பிறகு ஊடக வெளிச்சத்துக்கு முன் வருகிறார்.