Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மாற்று நான்தான்' : புதுக்கட்சி துவங்குகிறார், தீபாவின் கணவர் மாதவன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க-வினர் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரண்டாகப் பிரிந்துள்ளனர். அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' என்ற பேரவையைத் துவங்கினார்.

Madhavan


ஆரம்பத்தில், மாதவனும் தீபா பேரவையில் இருந்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து வெளியேறிய தீபாவின் கணவர் மாதவன், புதுக் கட்சி துவங்கப்போகிறேன்  என்று அறிவித்தார். இதையடுத்து, கடந்த வாரம் தீபாவுக்கும் மாதவனுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அதனால் தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தீபாவின் கணவர் மாதவன், நாளை காலை ஜெயலலிதா சமாதியில் புதிய கட்சி துவங்க உள்ளார். அப்போது, கட்சியின் கொடி மற்றும் பெயரை அவர் அறிமுகப்படுத்திவைக்கிறார். 

இதுகுறித்து மாதவனிடம் பேசியபோது, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் இரண்டாகப் பிரிந்து அடித்துக்கொள்கின்றனர். எனவே, என்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதனால், புதுக் கட்சி துவங்குகிறேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement