Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் ஆஜராக அவகாசம் கேட்கும் டி.டி.வி. தினகரன்

இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் தினகரன்' என்று கூறி, டெல்லி காவல்துறையினர் தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்தனர். தினகரனுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவரிடம் 1.3 கோடி ரூபாயையும் பறிமுதல்செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், தினகரனுக்கு எதிராக அவரிடம் வாக்குமூலம் பெற்றார்கள்.

Dinakaran

இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை முடிவுசெய்தது.  தினகரனை விசாரணைக்கு அழைப்பதற்கான சம்மனை, டெல்லி காவல்துறை அதிகாரிகள் தினகரனின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் சென்றார்கள்.


அப்போது, இந்த வழக்கில் தினகரன் மீதான குற்றசாட்டுகள் குறித்தும் விளக்கியுள்ளார்கள். டெல்லி காவல்துறை கொடுத்துள்ள சம்மனில், வரும் சனிக்கிழமை அன்று டெல்லியிலுள்ள குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெல்லி காவல்துறை முன் ஆஜராக, மூன்று நாள் அவகாசம் கேட்டு டி.டி.வி தினகரன் மனு தாக்கல்செய்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement