சென்னையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை! | May 17 blockades Income tax Department office

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (21/04/2017)

கடைசி தொடர்பு:13:26 (21/04/2017)

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை!

விவசாயிகளுக்கு ஆதரவாக வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர், மே-17 இயக்கத்தினர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராடிவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவது பல போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர், மே-17 இயக்கத்தினர். காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி, அவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருவதையடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.