வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (21/04/2017)

கடைசி தொடர்பு:14:03 (21/04/2017)

ஓ.பி.எஸ் அணியுடன் பேச ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் பழனிசாமி!

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச, எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 


Edappadi Palanisamy team
 

'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் மீண்டும் சேர பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச்சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவித்தனர். 

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில், இரு அணிகளும் இறங்கி உள்ளன. அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வைத்தியலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட  ஏழு பேர்  உள்ளனர்.

இதற்கிடையே  தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் சந்தித்து பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க