வைகை நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடடே ப்ளான் | Minister Sellur Raju's master plan to avoid water evaporation

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (21/04/2017)

கடைசி தொடர்பு:18:17 (21/04/2017)

வைகை நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடடே ப்ளான்

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியடைந்துள்ளது. அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கியுள்ளது.

vaigai

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் '142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடுவது. இதன் மூலம் நீர் ஆவியாமல் தடுக்கப்படும். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது' என்றார்.

இந்த முயற்சியை பாராட்டினாலும் எந்தவித தொழிற்நுட்ப உதவியும் இல்லாமல் போட்டதால் அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கியது.

 செய்தி, வீடியோ: வீ.சக்திஅருணகிரி

 


[X] Close

[X] Close