Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழனிசாமி அணியுடன் பேச குழு அமைக்கிறது பன்னீர்செல்வம் அணி

கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் பழனிசாமி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் இணைய வேண்டும் என்று தற்போது அ.தி.மு.க.வில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனிடையே, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித்ததோடு, பன்னீர்செல்வம் அணிக்கு அழைப்புவிடுத்தனர். இந்த அழைப்பை வரவேற்ற பன்னீர்செல்வம், தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டது, நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

Panneerselvam faction


இதையடுத்து, இரு அணிகளும் இணைய பன்னீர்செல்வம் அணி சார்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தில் உள்ள 30 பேரையும், கட்சியை விட்டு நீக்கியதை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்பட்டது. வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நேற்றைய தினம் முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தை தெரிவித்திருந்தோம். தற்போது, இரு அணிகள் இணைவது குறித்து அதிமுக (அம்மா) சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையிலான ஒரு கமிட்டியை இன்று (21.04.2017) அறிவித்திருக்கிறார்கள்.

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் நலனையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு கமிட்டியை அமைக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கமிட்டி பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement