வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (21/04/2017)

கடைசி தொடர்பு:17:36 (21/04/2017)

தண்ணீருக்காக வந்த யானை சேற்றில் சிக்கியது! 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

கோவை அன்னூர் அடுத்துள்ள சித்தன்குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த, 15 வயது யானை, நேற்று சேற்றில் சிக்கியது. பவானிசாகர் அணையின் பின் பகுதியில் உள்ள சேற்றில் அந்த யானை சிக்கியது. இதையடுத்து, அந்த யானையின் குரல் கேட்டு, மற்ற யானைகள் அதை மீட்க வந்தன. பின் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Elephant Rescued

இதையடுத்து, அந்த யானையை மீட்க வனத்துறையினர், நேற்று முதல் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  20 மணி நேரம் போராடி வனத்துறையினர் யானையை மீட்டனர். பின் அந்த யானைக்கு, நீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Elephant Rescued

சித்தன்குட்டையில், யானை சேற்றில் சிக்குவது இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம், இதே பகுதியில் யானை ஒன்று சிக்கியது. இதில் அந்த யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின் மீட்கப்பட்ட அந்த யானைக்கு, சிகிச்சையளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களிலேயே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது விலங்கின ஆர்வலர்களை வேதனையடைய வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க