Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மே 1 முதல் எட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கத் தடை: நெல்லை ஆட்சியர் அதிரடி

பருவமழை பொய்த்ததால், நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, நெல்லையில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து விட்டது. இதனால், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

Karunakaran

இதையடுத்து, தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து தீர்ப்பளித்தது. பின், குளிர்பான நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ததையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டது  இந்நிலையில், அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பெப்சி மற்றும் கோக் ஆகிய நிறுவனங்கள், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க வருகின்ற 30-ம் தேதி வரை, ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவரும், கோக், பெப்சி உள்ளிட்ட எட்டு நிறுவனங்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து, வரும் மே 1-ம் தேதி முதல் தண்ணீர் வழங்க தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் பிரச்னை சரியாகி, இயல்பு நிலை திரும்பும் வரையில் இந்தத் தடை தொடரும் என்று கருணாகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close