Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேச்சுவார்த்தைக்கு பன்னீர்செல்வம் அணியின் ஏழு பேர் குழு இவர்கள்தான்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் பழனிசாமி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் இணைய வேண்டும் என்று தற்போது அ.தி.மு.க.வில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனிடையே, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித்ததோடு, பன்னீர்செல்வம் அணிக்கு அழைப்புவிடுத்தனர். இந்த அழைப்பை வரவேற்ற பன்னீர்செல்வம், தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டது, நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

Panneerselvam faction


இதையடுத்து, இரு அணிகளும் இணைய பன்னீர்செல்வம் அணி சார்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தில் உள்ள 30 பேரையும், கட்சியை விட்டு நீக்கியதை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.


இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்பட்டது. வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் முனுசாமி தெரிவித்தார்.

Panneerselvam faction


இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ செம்மலை செய்தியாளர்களிடம், "முதல்வர் பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமையிலான இந்தக் குழுவில், மாஃபா. பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜே.சி.டி பிராபகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close