Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலைநிறுத்தப் போராட்டம் : ஏப்ரல் 25-ல் 55,000 மணல் லாரிகள் ஓடாது!

தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வருகிற 25-ம் தேதியன்று சுமார் 55,000 மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lorry strike
 

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 25-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 25-ம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 55,000 மணல் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் யுவராஜ் இந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close