சத்யராஜ், நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்டீர்கள்! சீமான் ஆவேசம்

பாகுபலி சர்ச்சையில் சத்யராஜ் யாரிடமும் மன்னிப்பு கேட்கத்தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

சீமான்

பாகுபலி இரண்டாம் பாகத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. சத்யராஜ் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருந்தனர். இதற்கு முதலில் திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி ’கன்னட நண்பர்களுக்காக’ என ஆதரவு கோரி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகர் சத்யராஜ், தனது கருத்துக்காக திரைப்படம் பாதிக்கப்படுவது சரியல்ல என்று மன்னிப்பு கோரினார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், யாரிடமும் சத்யராஜ் மன்னிப்பு கேட்கத் தேவியில்லை என்று கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''பாகுபலி-2 என்ற திரைப்படத்தை வெளியிடக்கூடாது என ஒரு அமைப்புக் கூறுவதை ஒட்டுமொத்த திரைப்பட உலகமும், கர்நாடக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில் நடிகர் சத்யராஜ் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. கன்னட அமைப்புகளின் இந்தப் போராட்டம் சத்யராஜுக்கு எதிரானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே எதிரானது'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!