சத்யராஜ் பெரியமனுஷன்! கமல்ஹாசன் பாராட்டு!

சிக்கலான சூழலில் பகுத்தறிவுடன் நடந்து கொண்டதாக நடிகர் சத்யராஜை வாழ்த்தி கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Kamal Haasan
 

2008-ம் ஆண்டில் நடந்த காவிரிப் பிரச்னை போராட்டத்தின்போது, வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், 'சத்யராஜ் நடித்த திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் கூறியுள்ளன.

பாகுபலியின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்த நிலையில், கர்நாடகாவில் அந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு வலுத்துவந்தது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வாட்டாள் நாகராஜையும், கன்னடர்களைப் பற்றியும் தான் பேசியதற்கு, மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து, நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


இந்நிலையில், சத்யராஜ் மன்னிப்பு கேட்டதை பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “ஒரு சிக்கலான சூழலில் சத்யராஜ் பகுத்தறிவுடன் நடந்து கொண்டுள்ளார். விருமாண்டி பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன்’ ” என்று பாராட்டியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!