வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (22/04/2017)

கடைசி தொடர்பு:12:23 (22/04/2017)

கவனமாக பேச வேண்டும்! சத்யராஜை எச்சரிக்கும் வாட்டாள் நாகராஜ்

நடிகர் சத்யராஜ் இனிமேல் கவனமாக பேச வேண்டும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 


2008-ம் ஆண்டு காவிரி பிரச்னை தொடர்பாகவும் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது நடிகர் சத்யராஜ், கன்னடர்களை அவமானப்படுத்தும்படி பேசினார் என்று தற்போது கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

 

அதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். பாகுபலி-2 வெளியாகும் ஏப்ரல் 28-ம் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். மேலும் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, 'என்னுடைய பேச்சு கன்னடர்களை புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று சத்யராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், 'சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. இனிமேல் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும்' என்று தெரிவித்தார்.