தெர்மாகோல் ஆபரேஷன் ஃபெயில்..ஃபெயில்..... செல்லூர் ராஜு புது ஐடியா! | Minister Sellur K Raju's thermocol project failed.. his next plan using Rubber Ball

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (22/04/2017)

கடைசி தொடர்பு:14:04 (22/04/2017)

தெர்மாகோல் ஆபரேஷன் ஃபெயில்..ஃபெயில்..... செல்லூர் ராஜு புது ஐடியா!

தெர்மாகோல் திட்டம் தோல்வியடைந்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக,  நீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துகள் கொண்டு வைகை அணை மூடப்படும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். 

Sellur raja
 

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் அட்டைகள் வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டார். அதாவது, கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க  நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூட செல்லூர் ராஜா முடிவு செய்தார். அவ்வாறு மூடினால் நீர் ஆவியாமல் தடுக்கப்படும் என்று பேட்டி அளித்தார். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதாம்.

செல்லூர் ராஜூவின் திட்டத்தின் துவக்கமாக, 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது.  ஆனால் நீர் நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கிவிட்டது. திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். நீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பால்கள் கொண்டு வைகை அணை மூட திட்டமிட்டுள்ளார்.

sellur raja
 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நீர்தேங்கங்களில் இவ்வாறு கறுப்பு ரப்பர் பந்துகள் போடப்பட்டன. நீர்தேக்கங்களில் நீர் ஆவியாகாமல் தடுக்க இவ்வாறு ரப்பர் பந்துகள் போடப்பட்டன. இந்த திட்டம் வெற்றி அடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இந்த முறையைதான் செல்லூர் ராஜு தற்போது கையில் எடுத்துள்ளார். 

 

Rubber balls

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க