சிகிச்சைக்காக வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்! சென்னையில் பரபர சம்பவம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி கோடீஸ்வரன் என்பவர் தப்பியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


கோடீஸ்வரன் என்பவர் கொலைக் குற்றம் மற்றும் திருட்டு வழக்கில் புழல் சிறையில் இருந்து வந்தார். அவருக்கு வயது 54. கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு  கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற வேண்டும் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். அதனால் கண்காணிப்பாளர் கோடீஸ்வரனை சிசிச்சைக்கு செல்ல அனுமதியளித்தார்.

இதனையடுத்து கோடீஸ்வரன் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பபட்டார். ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அவருக்கு பாதுகாப்பாக உடன் சென்றிருந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான மருத்துவப் பிரிவு உள்ளது. அதில் கோடீஸ்வரனை அமர வைத்துவிட்டு ஆயுதப் படைப் பிரிவு காவலர்கள் இருவரும் மருத்துவரை சந்திக்க சென்றிருந்தனர். இந்த நேரத்தில் கைதி கோடீஸ்வரன் அங்கிருந்து தப்பியுள்ளார். தற்போது காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான சிறப்பு வார்டு என்பதால் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!