வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (23/04/2017)

கடைசி தொடர்பு:13:02 (23/04/2017)

செல்போன் புக் செய்தவருக்கு செங்கல் கிடைத்த சோகம் - ஏமாந்த சென்னை மாணவி

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் செல்போன் ஆர்டர் செய்த மாணவிக்கு செங்கல் பார்சலில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சம்பவம் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியின் விவரங்கள் பின்வருமாறு.... நித்திலா தேவி என்பவர் சென்னை ஐ.ஐ.டியில் படித்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  14,000 ரூபாய் மொபைல் போன் 12,000 ரூபாய்க்கு ஸ்நேப்டீல் இணைய வர்த்தக நிறுவனத்தில் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். உடனே அதனை புக் செய்த அவர், அதற்கான முழுத் தொகையையும் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு ஸ்னாப்டீல் நிறுவனத்திடம் இருந்து செல்போனுக்கான பார்ச்சல் வந்துள்ளது. ஆவலுடன் அதனை வாங்கி பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் செல்போனுக்கு பதிலாக செங்கல்கட்டி தான் இருந்துள்ளது.