ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் - திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | M.K.Stalin will participate in strike at Thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (23/04/2017)

கடைசி தொடர்பு:14:37 (23/04/2017)

ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் - திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 40 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அனைத்து கட்சிகள் சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போராடத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். 

vellaiyan

இது குறித்து தெரிவித்த அவர், 'ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் 60 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள். அந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்திலும் வணிகர்கள் கலந்து கொள்வார்கள்' என்று தெரிவித்தார். ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.