வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (24/04/2017)

கடைசி தொடர்பு:17:35 (24/04/2017)

தமிழ் செம்மல் விருதுகள் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்

2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்குகிறார். 

தமிழுக்காக தொண்டாற்றி வருபவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசால் தமிழ் அறிஞர்களின் பெயரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்துக்கும் கபிலர் விருது - முனைவர்   இல.க.அக்னிபுத்திரனுக்கும்,  உ.வே.சா விருது - முனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணனுக்கும் கம்பர் விருது -  இலங்கை ஜெயராஜுக்கும் சொல்லின் செல்வர் விருது -  பி.மணிகண்டனுக்கும் ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பர்ட்க்கும்  உமறுப்புலவர் விருது - முனைவர் தி.மு.அப்துல் காதருக்கும், இளங்கோவடிகள் விருது- நா. நஞ்சுண்டனுக்கும் அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபாலுக்கும் வழங்கப்படவுள்ளது.

மொழிபெயர்ப்பாளர் விருது - நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன்,  அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா,  உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், செல்வி  வி.சைதன்யா,  சி.முருகேசன்,  கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயவும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேலும் 2015-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதும் மாவட்டத்துக்கு ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 25,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.