வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (24/04/2017)

கடைசி தொடர்பு:09:41 (25/04/2017)

பாரிமுனை அருகே நடைபாதைக் குடில்களை அகற்றிய காவல்துறை!

சென்னை பாரிமுனை அருகே, நடைபாதைகளில் தங்கி இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது காவல்துறை.

road

சென்னையில், தெருவோரமாகவும் கூவம் கரைகளின் ஓரத்திலும் நடைபாதையிலும் தங்கியிருப்பவர்களை எங்கும் காணலாம். தினக்கூலி வேலைகளைப் பார்த்துவரும் இவர்களுக்கு வீடு எடுத்துத் தங்குவது சாதாரண விஷயமல்ல. இதனிடையே, தங்கள் குடும்பங்களுடன் பாரிமுனை டேவிட்சன் சாலை நடைபாதைகளில் தங்கிவரும் இவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர், காவல்துறையினர்.

இவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படாமல், திடீரென்று வெளியேறச் சொல்லி வற்புறுத்தப்படுவதாக, அங்கிருந்து அகற்றப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நடைபாதையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதுகுறித்தும் காவல்துறையினர் தரப்பில் அறிவிக்கப்படவில்லை. கடந்த சனிக்கிழமை முதலே இந்த நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.