வெளியிடப்பட்ட நேரம்: 05:32 (25/04/2017)

கடைசி தொடர்பு:07:57 (25/04/2017)

தமிழகம் முழுவதும் இன்று பந்த்!

பந்த்

வரலாறு காணாத வறட்சியால், கடுமையான இழப்புக்கு உள்ளாகினர் விவசாயிகள். விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், கடந்த 40 நாட்களாக டெல்லி, ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர் விவசாயிகள். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க தலைமையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஏப்ரல் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை தொடங்கி மாலை வரை தமிழகத்தின்  அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு, போக்குவரத்தும் முடக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் போக்குவரத்து வாகனங்கள் வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.