வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (25/04/2017)

கடைசி தொடர்பு:17:10 (25/04/2017)

#LiveUpdates : ’அடுத்த கட்டப் போராட்டம் வெடிக்கும்’..எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்

முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின்,”'மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்னைகளில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டத்தை மிகப்பெரியளவில் நடத்துவோம்’, என்று எச்சரித்துள்ளார்.

Stalin arrested

சென்னை, அண்ணா சாலையில் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

 

 

தஞ்சையில் கடைகள் அடைப்பு!

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

முழு அடைப்புப் போராட்டம்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இல்லை

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தாலும், போக்குவரத்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன.
 

 

திருச்சியில், கே.என்.நேரு தலைமையில் 500 பேர் கைது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். 

மறியலில் ஈடுபட்ட நேரு, 'தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகம் முழுவதும் மறியல் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பில், அனைத்துக் கட்சிகளும் உணர்வோடு கலந்துகொண்டுள்ளார்கள். திருச்சி முழுவதும் ஆங்காங்கே மறியல் நடைபெறுகிறது. விவசாயத்தைக் காக்கவும் விவசாயிகளின் நலனுக்காகவும் நடக்கும் இந்தப் போராட்டம் வெற்றிபெறும்' என்றார். 

சி.ய.ஆனந்தகுமார் படங்கள்: தே.தீட்ஷித்

தேனியில்... மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெறுவதால், தமிழக எல்லையான கோரிமேட்டில் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 புதுச்சேரியில், முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதையொட்டி, ஆட்டோவுக்கு அலைமோதும் பொதுமக்கள்.

முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருவாரூரில் கைதுசெய்யப்பட்டார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

TN Bandh
 

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், ஏப்ரல் 25-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

TN bandh
 

இந்த நிலையில், தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள  முழுக் கடையடைப்புப்  போராட்டத்துக்கு  வணிகர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர். 

Bandh

 

இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா, பா.ம.க  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த முழு அடைப்புக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காதநிலையில், அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுவருகின்றன. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை

 


ராமநாதபுரம்:

பொது வேலை நிறுத்தம் காரணமாக இராமநாதபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. திமுக மாவட்ட செயலர் திவாகரன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு சாலை மறியல் செய்து கண்டனத்தை தெரிவித்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கைது!

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தையொட்டி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக வள்ளியூரில் சாலை மறியல் நடைபெற்றது. முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் கலந்து கொண்ட 200-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம்:

தினமும் பரபரப்பாக காணப்படும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் இன்று வணிகர்கள் கடையை திறக்காத்தால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆட்டோகளும் இன்று ஓடவில்லை. 

கடலூர்:

கடலூரில் நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தில் விவசாயிகள், வணிகர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். வணிகர்கள், தாமாகவே முன்வந்து கடையடைப்பு செய்ததால் கடலூர் வெறிச்சோடியது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

கோவை:

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் தி.மு.க, இடதுசாரி கட்சிகள், மாதர் சங்கம், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வட கோவை மேம்பாலம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். 

படங்கள் : விகடன் புகைப்படக் குழு


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க