சசிகலா, தினகரன் பேனர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டுவருகின்றன.

ADMk banner
 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றார். இதையடுத்து, டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.அ.தி.மு.க, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிளவுப்பட்டநிலையில்,  இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள், படங்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டுவருகின்றன. அ.தி.மு.க இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கியமானது, கட்சி அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதுவும் ஒன்று. ஓ.பி.எஸ் தரப்பு நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், விரைவில் அ.தி.மு.க இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!