வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (26/04/2017)

கடைசி தொடர்பு:17:13 (26/04/2017)

எண்ணூரில் எண்ணெய்க் கப்பல் விபத்து: பதிலளிக்க தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

எண்ணூரில் இரு கப்பல்கள் மோதி எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும்  உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்.

ennur

கடந்த ஜனவரி 28ம் தேதியன்று எண்ணூர்க் கடலில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் அப்பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்குப் பரவிய எண்ணெய்க் கசிவை வாளிகள் கொண்டு அள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . 

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும் பசுமைத் தீர்ப்பாயத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறு சீரமைப்பு நடந்த இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தபட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.