வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (27/04/2017)

கடைசி தொடர்பு:09:23 (27/04/2017)

#Alert : கோடை விடுமுறையில் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கும் பள்ளிகளின் கவனத்துக்கு!

பொதுத் தேர்வெழுதும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசு எச்சரித்துள்ளது. 

School special class
 

பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் மற்றும் சில அரசுப் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதைப் பொருட்படுத்தாமல், மதிப்பெண் இலக்கை மட்டுமே மனதில்வைத்து, கோடை விடுமுறையின்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திவருவதாகப் பல பள்ளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பள்ளிகளின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இப்போதே பாடம் நடத்தப்படும் போக்கையும் அரசு கண்டித்துள்ளது. 
இதுகுறித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ‘யாரும் இந்தக் கோடைகாலத்தில் அல்லது பள்ளி விடுமுறை நாள்களில்  சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க