வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (27/04/2017)

கடைசி தொடர்பு:13:10 (27/04/2017)

அடையாறு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தினகரன்!

இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்று, நீதிமன்றத்தில் தினகரனை ஆஜர் செய்தபோது, தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தது, நீதிமன்றம். அதன் தொடர்ச்சியாக, தினகரனை சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த, டெல்லி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் முடிவுசெய்தனர்.

டி.டி.வி தினகரன், இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையில், தினகரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.